Ads Top

திருக்குறள் / THIRUKKURAL



நூலின்‌ அமைப்பு
  • திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின்‌ உண்மையான வரலாறு நமக்குக்‌ கிடைத்திலது. ஒவ்வொரு சமயத்தவரும்‌ திருவள்ளுவரைத்‌ தத்தம்‌ சமயத்தைச்‌ சேர்ந்தவரென்று புகழ்ந்து கூறுமளவிற்குத்‌, திருக்குறள்‌ இடமளிக்கின்றது.
  • இறைக்‌ கோட்பாட்டின்‌ பொதுவான நெறியைத்‌ திருக்குறள்‌ காட்டுகிறது.
  • திருக்குறள் – திரு + குறள் = சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல்
  • இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
  • திரு - சிறப்பு அடைமொழி
  • குறள் 80 குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்ந்துவதால் ➝ ஆகுபெயர்
  • திருக்குறள் = அடையெடுத்த கருவியாகுபெயர்
  • திருக்குறளின் முதல் பெயர் à முப்பால்
  • ஒன்பது இயல்களையும்‌ 133 அதிகாரங்களையும் 1330 குறட்பாக்களையும் கொண்டது
  • திருக்குறள்‌ ஏழு சீர்களால்‌ அமைந்த வெண்பாக்களைக்‌ கொண்டது.
  • ஏழு என்னும்‌ எண்ணுப்பெயர்‌ எட்டுக்‌ குறட்பாக்களில்‌ இடம்‌ பெற்றுள்ளது.
  • திருக்குறளில்‌ பத்து அதிகாரம்‌ பெயர்கள்‌ உடைமை என்னும்‌ சொல்லில்‌ அமைந்துள்ளது.
  • திருக்குறளில்‌ 2 முறை வரக்கூடிய அதிகாரத்‌ தலைப்பு – குறிப்பறிதல்‌
  • திருக்குறள் 3 முப்பால் பிரிவுகளையும் 9 இயல்களையும் 133 அதிகாரங்களையும் கொண்டது
  • திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
  • தனிமனிதனது வாழ்வை கூறுவது - அறத்துப்பால்
  • சமுதாய வாழ்வை கூறுவது - பொருட்பால்
  • அக வாழ்வை கூறுவது - இன்பத்துப்பால்
  • திருக்குறள் முன்னோடி - புறநானூறு
  • திருக்குறளின் விளக்கம் - நாலடியார் (சமண முனிவர்கள்)
  • திருக்குறளின் பெருமையை கூறுவது - திருவள்ளுவமாலை
  • திருக்குறளில் சாரம் எனப்படுவது - நீதிநெறி விளக்கம் (குமரகுருபரர்)
  • திருக்குறளின் ஒழிப்பு எனப்படுவது - திருவருட்பயன் (உமாபதி சிவம்)
  • நீதி நூல்களின்‌ நந்தா விளக்கம்‌ – திருக்குறள்‌
  • மனிதன்‌ மனிதனுக்கு அறிவுரை கூறிய நூல்‌ – திருக்குறள்‌
  • திருக்குறள் நடையியல் நூல் ஆசிரியர் - இ.சுந்தரமூர்த்தி
  • அரசு, வேளாண்மை, மருந்து, அன்பு, உயிர் மற்றும் மகிழ்ச்சி என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது
  • உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள். இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
  • மலையச்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
  • திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
  • திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
  • ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.
  • இதன்‌ மொத்த அதிகாரங்கள்‌ 133 இதன்‌ கூட்டுத்தொகை ஏழு.
  • மொத்தம்‌ குறட்பாக்கள்‌ 1330 இதன்‌ கூட்டுத்‌ தொகையும்‌ ஏழு.
  • திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது
  • தமிழுக்கு கதி என செல்வக் கேசவராய முதலியார் கூறும் நூல்கள் -  கம்பராமாயணம், திருக்குறள்
  • உலகளாவிய இலக்கியம் என அழைக்கப்படுவது - திருக்குறள்
  • உடம்பை வளர்த்தேன் உபயம் அறிந்தே - திருவள்ளுவர்
  • அறிவு அற்றம் காக்கும் கருவி - திருவள்ளுவர்
  • தமிழரின் வாழ்வியல் இலக்கணம் - திருவள்ளுவர்
நூலின்‌ உரைகள்‌
  • திருக்குறளின்‌ பழமையான உரை – பதின்மர்‌ உரை.
  • திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்‌ – தருமர்‌, தாமத்தர்‌, திருமலையர்‌, பரிதி, பரிபெருமாள்‌, பரிமேலழகர்‌, மல்லர்‌, மணக்குடவர்‌, நச்சர்‌, காளிங்கர்‌.
  • இப்பதின்மரில்‌ முதலாக உரை எழுதியவர்‌ மணக்குடவர்‌.
  • இப்பதின்மர்‌ உரையில்‌ சிறந்த உரையாக கருதப்படுவது பரிமேலழகர்‌ உரை ஆகும்‌.
  • பதின்மர்‌ எழுதிய உரையில்‌ நமக்கு கிடைத்தது 5 மட்டூமே.
  • பரிமேலழகர்‌ உரையுடன்‌ முதல்‌ முதலாக திருக்குறளை பதிப்பித்தவர்‌ – இராமானுஜ கவிராயர் (1840).
  • திருக்குறளை ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்த்த இந்தியர்‌ – கே.எச்‌. பால சுப்பிரமணியன்
கூற்றுகள்
  • நூலும் இரண்டும் சொல்லுக்குறுதி - நாலடியார் , திருக்குறள்
  • தமிழுக்கு கதி - கம்பராமாயணம், திருக்குறள்
  • முப்பெரும் நூல்கள் - திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு
  • பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்
மொழிபெயர்ப்பு
  • இஃது உலகில்‌ 107 மொழிகளில்‌ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழிப்பெயர்த்தவர் - ஜீ.யு.போப் (1886)
  • ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
  • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்கபோலி மொழிக்கு மொழிபெயர்த்தவர் - கிட்டு சின்னமணி
  • இலத்தீன்‌ – விரமாமுனிவர்‌ (அறம்‌, பொருள்‌ மட்டும்‌).
  • ஆங்கிலம்‌ – ஜி.யு. போய்‌ (1886)
  • ஜெர்மன்‌ – கிரெளல்‌
  • ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழர்கள் - உ. வே. சு. ஐயர், இராஜாஜி
  • பிரெஞ்சு - ஏரியல்
  • வடமொழி - அப்பாதீட்சிதர்
  • தெலுங்கு - வைத்தியநாத பிள்ளை
  • இந்தி - பி.டி.ஜெயின்
  • திருக்குறள் கருத்தை 1994ஆம் ஆண்டு முதன்முறையாக ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர் கிண்டெர்ஸ்லே
வேறு பெயர்கள்
  • உலக பொது நூல்
  • அறவிலக்கியம்
  • தமிழர் திருமறை
  • முப்பால்
  • பொய்யாமொழி
  • வாயுறைவாழ்த்து
  • உத்தரவேதம்
  • தெய்வநூல்
  • திருவள்ளுவம்
  • தமிழ்மறை
  • திருவள்ளுவ பயன் (நச்சினார்க்கினியர்)
  • பொருளுரை (மணிமேகலை)
  • முதுமொழி தமிழ் மாதின் இனிய உயர்நிலை (கவிமணி)
  • நீதி இலக்கியத்தின் நந்தாவிளக்கு
  • உலகப் பொதுமறை
  • பொதுமறை
  • முதுமொழி
உரையாசிரியர்கள்
  • மணக்குடவர்
  • பரிமேலழகர்
  • பரிப்பெருமாள்
  • திருமலையர்
  • மல்லர்
  • தருமர்
  • காளிங்கர்
  • தாமத்தர்
  • பரிதி
  • நச்சர்
  • இவர்கள் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதிய பதின்மர் ஆவர்
  • சிறந்த உரை பரிமேலழகர் உடையது
  • முதன் முதலில் உரையிட்டவர் à மணக்குடவர்
  • முதன் முதலில் அச்சிட்டவர் à தஞ்சை ஞானப்பிரகாசர் (1812)
  • உரை எழுதியவர்கள் காலத்தால் முந்தியவர் à தருமர்
  • காலத்தால் பிந்தியவர் à பரிமேலழகர்
  • திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர் (மேலும் பலர் எழுதியுள்ளனர்)
  • மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்
  • பரிமேலழகர் உரையுடன் முதல் முதலில் திருக்குறள் வெளியிட்டவர் - ராமானுஜ கவிராயர்
  • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்
  • தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமேலழகர் திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு எல்லையுரை செய்தார் இவர்கள் என்பது பழம்பாடல்
சிறப்புகள்
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
  • பதினெண்கீழ்கணக்கு நூல்களில் இதுவே மிக பெரியது, அதிக பாடல்கள் கொண்டது
  • மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறநூல் திருக்குறள்
  • அரங்கேற்றப்பட்ட இடம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் 7 இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் உள்ளது
  • திருக்குறளில் 10 அதிகாரங்களில் பெயர்கள் உடைமை என முடியும்
  • திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமையை குறித்து சான்றோர்கள் பலர் பாடிய பாக்களின் தொகுப்பு
  • விக்டோரியா மகாராணி காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்
  • உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
  • இங்கிலாந்து நாட்டு காட்சி சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது
  • திருக்குறளில் அனிச்சமலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது
  • திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் à குறிப்பறிதல் (பொருட்பால்), குறிப்பறிதல் (காமத்துப்பால்)
  • கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன
  • 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன
  • ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து என்ற குறளில் 1, 5, 7 என்ற பகா எண்கள் உள்ளது
  • ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும் ஒரே சொல் நான்கு முறை 22 குறட்பாக்களிலும் ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம்பெற்றுள்ளது
  • தமிழ், கடவுள் என்ற சொற்கள் இடம் பெறவில்லை
  • ஒரு முறை மட்டும் இடம் பெற்ற எழுத்து - ளீ, ங
  • 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன
  • மொத்த சொற்கள் - 12000
  • மொத்த எழுத்துக்கள் à 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்து 247இல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம் பெற்ற ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை - குன்றிமணி
  • பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து - ஔ
  • இடம்பெற்ற இரு மரங்கள் - பனை, மூங்கில்
  • அதிகம் பயன்படுத்திய எழுத்து - னி (1705)
  • இடம்பெறாத ஒரே எண் 9
  • கோடி என்ற சொல் 7 முறை இடம்பெற்றுள்ளது
  • 26 மொழிகளில் வெளிவந்துள்ளது
  • ஏழுபது கோடி ஒரு முறை வந்துள்ளது
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
  • அன்னம், கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள் (பறவை), மயில், ஆமை, கயல் (மீன்), மீன் (விண்மீன்), முதலை, நத்தம் (சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது (புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.
  • தமிழகத்தில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவது எப்போது - தைத்திங்கள் இரண்டாம் நாள்
  • திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் - ஊழியல் (அதிகாரம்: ஊழ்)
  • வழக்கு என்பதன் பொருள் - வாழ்க்கை நெறி
  • என்பு என்பதன் பொருள் – எலும்பு
  • படிறு என்பதன் பொருள் – வஞ்சம்
  • செம்பொருள் என்பதன் பொருள் – மெய்ப்பொருள்
  • ஆர்வலர் என்பதன் பொருள் – அன்புடையவர்
  • துவ்வாமை என்பதன் பொருள் – வறுமை
  • இனிதீன்றல் என்பதனை பிரித்தெழுதுக - இனிது + ஈன்றல்
  • புரை என்பதன் பொருள் – குற்றம்
  • புகழ்பெற்ற தமிழ்மொழி இலக்கியமாகக் குறிப்பிடப்படுவது எது – திருக்குறள்

No comments:

Powered by Blogger.