நாலடியார் / NALATIYAAR
ஆசிரியர் குறிப்பு
- சமண முனிவர்கள்
- நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
- நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள "ஒரே தொகை நூல்" நாலடியார் ஆகும்.
- 400 பாடல்கள், 40 அதிகாரங்கள்
- சமண சமயம் சார்ந்தது
- முத்தரையரை பற்றி கூறும் நூல்
- அறக்கருத்துக்களைக் கூறுவதாகும்.
- பா வகை - வெண்பா
- இயற்றப்பட்ட காலம் - கி.பி.250 ஐ ஒட்டிய காலம்
- உள்ளடக்கிய பொருள்வகை – அறம்
- நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.
- ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
- முப்பெரும் அற நூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு
- நாலடியாரில் முதல் இயல் = துறவறவியல்
- நூலை தொகுத்தவர் = பதுமனார்
- நூலை முப்பாலாக பகுத்தவர் = தருமர்
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
- அறத்துப்பால் = 13 அதிகாரங்கள்
- பொருட்பால் = 24 அதிகாரங்கள்
- இன்பத்துப்பால் = 3 அதிகாரங்கள்
- நாலடி
- நாலடி நானூறு
- வேளாண் வேதம்
- திருக்குறளின் விளக்கம்
- தருமர்
- பதுமனார்
No comments: