- காலிஃப்ளவர் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ள ஒரு சிறந்த காய்கறியாகும்.
- இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு எதிரான ஏராளமான தாவர மூலக் கூறுகள் இதில் அடங்கியுள்ளன.
- காலிஃப்ளவரில் நார்ச்சத்து வைட்டமின் சி வைட்டமின் கே வைட்டமின் பி6 ஃபோலேட் பாந்தோதெனிக் அமிலம் பொட்டாசியம் மாங்கனிசு மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகமான அளவில் காணப்படுகின்றன.
- க்ரூசிஃபெரஸ் காய்கறிகளான காலிஃப்ளவர் போன்றவை இண்டோல்-3-கார்பினோல் எனப்படும் தாவரக் கலவையைக் கொண்டிருக்கின்றன. இது உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை கட்டுப்படுத்தி ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.
- காலிஃப்ளவரில் இருக்கக்கூடிய சல்ஃபோராபேன் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க கூடிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இது டிஎன்ஏ சேதத்தில் இருந்து நம் செல்களை பாதுகாப்பது மற்றும் புற்றுநோய் செல்களை செயலிழக்கச் செய்வது என பல வழிகளில் சல்போராபேன் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது.
- காலிஃப்ளவரில் கோலின் என்ற மூலப்பொருள் அதிகமாக உள்ளது. இந்தக் கோலின் நமது மனநிலை மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றிற்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும்.
- இது மத்திய நரம்பு மண்டலத்தை சமிக்ஞை செய்வதில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கியமான மூலக்கூறு. மேலும் இது நமது மூளையின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.
- காலிஃப்ளவரில் இருக்கக்கூடிய சல்ஃபோராபேன் ஆக்சிஜனேற்றியாக செயல்பட்டு, ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் அழற்சி சேதத்தை குறைக்கிறது.
- இதன் காரணமாக இதய நோய்களுக்கான அறிகுறிகள் கட்டுப்படுத்தப்படுவதோடு ஆத்தெரோசிகிளீரோசிஸ் எனப்படும் பெருந்தமனி தடிப்பு நோய் வராமல் தடுக்கிறது.
காலிஃப்ளவரின் அருமையான நன்மைகள் / MEDICAL BENEFITS OF CAULIFLOWER
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
January 18, 2023
Rating:
5
No comments: