- எல்ஐசி நிறுவனம், ஜீவன் ஆசாத் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் ஜீவன் ஆசாத் என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் யெதுள்ளது.
- இதில், அடிப்படை உத்தரவாத தொகை குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் எனவும், அதிகபட்சம் ரூ.5 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான காலத்துக்கு இந்த காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம்.
- எடுத்துக் கொண்ட காப்பீடு காலத்தில் இருந்து 8 ஆண்டுகள் கழித்தது போக எஞ்சிய ஆண்டுகளுக்கு மட்டும் பிரீமியம் செலுத்த வேண்டி வரும். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பிறந்து 90 நாட்கள் ஆன குழந்தை முதல் 50 வயது வரை சேர்ந்து கொள்ள முடியும்.
- இது, பங்குச்சந்தை சாராத, தனிநபர் சேமிப்பு காப்பீட்டு திட்டமாகும். கடன் வசதி, இறப்பு நிகழ்ந்தால் உத்தரவாத தொகை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த காப்பீட்டில் உள்ளன.
- பிற காப்பீட்டு திட்டங்களை போலவே, பாலிசிதாரர் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப காலாண்டு, அரையாண்டு, ஆண்டு மற்றும் மாதாந்திர முறையில் பிரீமியம் செலுத்திக் கொள்ளலாம். இந்த காப்பீட்டை ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
- மேலும் விவரங்களுக்கு www.licindia.in அல்லது அருகிலுள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தை அணுக வேண்டும் என எல்ஐசி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டம் / LIC JEEVAN AZAD SCHEME
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
January 01, 2024
Rating:
5
No comments: