- கவியரசர் கண்ணதாசன் (ஜூன் 24, 1927 – அக்டோபர் 17, 1981) சிவகங்கை மாவட்டத்தில் சிறுகூடல்பட்டி என்னும் ஊரில் சாத்தப்பனார் – விசாலாட்சிக்கு ஜூன் 24, 1927 அன்று பிறந்தார்.
- இவருடைய இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.
- இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது.
- கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
- இவர் கவியரசு எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
- காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
- ஏராளமான திரைப்படப் பாடல்கள் எழுதியுள்ளார்.
- இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
- 1949ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
- தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
- சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
சிறப்பு பெயர்கள்- கவியரசு
- காரைமுத்து புலவர்,
- வணங்காமுடி
- பார்வதிநாதன்
- ஆரோக்கியசாமி
- கமகப்பிரியன்
- கவியரசன்
- கவிச்சக்கரவர்த்தி
படைப்புகள்- மாங்கனி
- ஆட்டனத்தி ஆதிமந்தி
- கவிதாஞ்சலி
- பொன்மழை
- அம்பிகா
- அழகு தரிசனம்
- பகவாத் கீதை விளக்கவுரை
- ஸ்ரீ கிருஷ்னகவசம்
- பாரிமலைக் கொடி
- சந்தித்தேன் சிந்தித்தேன்
- அனார்கலி
- தெய்வ தரிசனம்
- இயேசு காவியம் (5 பாகங்கள் 149 உட்பிரிவு - இறுதியாக எழுதிய காப்பியம்),
- அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்),
- பேனா நாட்டியம்
- சுருதி சேராத ராகங்கள்
- முற்றுப்பெறாத காவியங்கள்
- பஜகோவிந்தம்
- கிருஷ்ண அந்தாதி
- கண்ணதாசன் கவிதைகள்.
நாவல்கள்- சேரமான் காதலி (சாகித்ய அகாடமி விருது)
- குமரிக் காண்டம்
- வேலன்குடித் திருவிழா
- விளக்கு மட்டுமா சிவப்பு
- ஆயிரங்கால் மண்டபம்
- சிங்காரி பார்த்த சென்னை
- ஊமையான் கோட்டை
- இராஜ தண்டனை
- சிவகங்கைச் சீமை
கண்ணதாசன் / KANNADASAN
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
January 19, 2023
Rating:
5
No comments: