- தலையணை இல்லாமல் உறங்குவது பெரும்பாலானவோருக்கு கடினமான ஒரு காரியமாகவே இருக்கும். ஆனால் தலையணையை சம அளவில் வைத்து தூங்க வேண்டும்.
- அது கொஞ்சம் உயரம் குறைவாகவோ அல்லது தாழ்வாகவோ இருக்கும்போது நம் உடலுக்கும் தூக்கத்திற்கும் பல வகையான தீமைகளை தரக்கூடிய ஒன்றாகும்.
- உடல் முழுவதையும் சமமாக விரிப்பிலோ அல்லது மெத்தையிலோ கிடத்தி தலையை மட்டும் உயரமான அளவில் வைத்து தூங்கும் போது கழுத்து வலியானது ஏற்படுகிறது.
- நம் கழுத்துப் பகுதியில் தான் இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்கள் இருக்கின்றன. தலையணையை உயரமாக வைத்து படுக்கும் போது அவை இரத்த குழாய்களை அழுத்துவதால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக நமக்கு தலைவலி போன்ற உபாதைகள் அடிக்கடி ஏற்படுகிறது.
- நாம் ஒரு பக்கவாட்டில் சாய்ந்து தலையணையில் படுக்கும் போது நமது தோல் பக்கம் ஒருவிதமான அழுத்தம் ஏற்படுகிறது இதன் காரணமாக முதுகு வலி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
- தலையணையை உயரம் குறைவாகவோ அல்லது உயரம் அதிகமாகவோ வைத்து தூங்குவதின் காரணமாக நமது உடலின் வடிவமைப்பு பாதிக்கப்படுகிறது.
- தலையணையை வைத்து உறங்குவதன் காரணமாக சில பேருக்கு அலர்ஜி ஏற்படலாம். இந்த தலையினில் இருக்கக்கூடிய காட்டன் மற்றும் தூசி போன்றவற்றினால் நமக்கு அலர்ஜியானது உண்டாக்கலாம்.
- தலையணை வைத்து உறங்குவதால் நமக்கு ஏற்படக்கூடிய சுவாச பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கிறது. தலையணையை வைத்து ஒரு நிலையில் உறங்கும் போது நமது சுவாச உறுப்புக்கள் தேவையான ஆக்ஸிஜன் நல்ல அளவில் கிடைக்கிறது.
தலையணை உபயோகித்தால் நம் உடம்பில் நடக்கும் நன்மைகள் / BENEFITS OF PILLOW FOR HUMAN BODY
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
January 18, 2023
Rating:
5
No comments: