Ads Top

பிரம்மாண்டமான பிக்பாஸ் 6 தமிழ் இறுதிப்போட்டி / BIGG BOSS 6 TAMIL GRAND FINALE RESULT / WINNER

  • பிக்பாஸ் சீசன் 6 க்ராண்ட் ஃபினாலேவின் நிகழ்ச்சியின் நிரல் குறித்து பார்க்கலாம். கடந்தாண்டின் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் பங்குபெற்றனர்.
  • முதலில் 20 போட்டியாளர்கள் மட்டும் வந்த நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி உள்ளே வந்தார்.
15 நபர்கள் வெளியேற்றம்
  • இந்த போட்டியில் பங்குபெற்ற ஜி.பி. முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். 
  • மூன்றாம் வாரத்தில் ஷெரினாவும், நான்காம் வாரத்தில் மகேஸ்வரியும், ஐந்தாம் வாரத்தில் நிவாஷினியும், ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டரும், ஏழாம் வாரத்தில் குயின்ஸியும், எட்டாம் வாரத்தில் ராம் மற்றும் ஆயிஷாவும், ஒன்பதாம் வாரத்தில் தனலட்சுமியும், பத்தாம் வாரத்தில் மணிகண்டாவும், பதினோராம் வாரத்தில் ரச்சித்தாவும், பன்னிரண்டாம் வாரத்தில் ஏடிகே ஆகிய 15 நபர்கள் வெளியேறினர்.
இறுதிப்போட்டி
  • மீதம் இருந்த 6 நபர்களில், கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னர், மிட் நைட் எவிக்ஷன் முறையில், மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். 
  • இந்த சீசனின் இரண்டாவது பணப்பெட்டி டாஸ்க்கில் 11,75,000 பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.தற்போது பிக்பாஸ் வீட்டில் அஸிம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர். 
  • இவர்கள் மூன்று பேருக்கும் பல ஆர்மிகள் உள்ளது. இவர்கள் மூவரும் ஒன்றுக்கொன்று சலைத்தவர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
அசீம் vs விக்ரம் vs ஷிவின்
  • விக்ரமனின் ரசிகர்கள், அவர்தான் டைட்டில் வின்னர் என ஒரு பக்கம் கூற, மறு பக்கம் அஸிமின் ரசிகர்கள் அவருக்காக பிக்பாஸ் டைட்டிலை குத்தகைக்கு எடுத்துவைத்தது போல், டைட்டில் வின்னர் அஸிம் என்ற ஹாஷ்டாகை வைரல் ஆக்கி வருகின்றனர். 
  • இவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட ஷிவினின் ரசிகர்கள், “தேவதை ஷிவின்”, “நீதித்தாய் ஷிவின்” என்று அவரை ட்ரெண்ட் செய்து வாக்கு பெற்று வருகின்றனர்.
  • இவர்களில், யார் சீசன் 6 நிகழ்ச்சியின் வின்னர், ரன்னர் என்பதை இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும். 
  • க்ராண்ட் பினாலேவை விஜய் தொலைக்காட்சி அல்லது ஹாட்ஸ்டாரில் காணலாம். இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவார் என்பது குறிப்பிடதக்கது.
வெற்றி
  • பிக் பாஸ் 6 தமிழ் குழுவினரின் ஆதாரத்தின்படி - AZEEM

No comments:

Powered by Blogger.