- மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது.
- இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.
- இந்த நிலையில், 2022 ஆண்டுக்கான பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வு (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination) அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
- இந்த பதவிக்கான எழுத்து தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும். முதல்தாளில் கொள்குறி வகை கேள்விகள் இந்தி, ஆங்கில மொழிகளில் இடம்பெறும்.
- இரண்டாவதுதாளில் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பில் சிறிய கட்டுரை எழுத வேண்டும். அதில், ஆங்கிலம் அல்லது இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் இந்த கட்டுரையை எழுதலாம்.
- இதையடுத்து தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில், தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் முதல் தாள் கேள்விகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தி அல்லாத பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பலன் கிடைக்கும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
- இந்த பதவிக்கு நடைபெறும் எழுத்து தேர்வு இதுவரை இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே எழுத அனுமதிகப்பட்டு வந்தது. தற்போது பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என்று முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதி உள்ளவர்கள் பிப். 17-ம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு முதன்முறையாக தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுத அனுமதி
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
January 21, 2023
Rating:
5
No comments: