பெற்றோரின் தத்துப்பிள்ளை
Parents

காலையில் எழுந்ததும் உரையாடிக்கொள்வர்!
ஊர்செய்தி யாவும் பரிமாறிக்கொள்வர்!
பிள்ளைகள் தூரத்தில் சென்றபோதும்
கையருகில் காட்சிகொள்வர்!
பேரன் பேத்திகள் அருகில் இல்லை என்றாலும்
அவர்களின் லீலைகளைக் கண்டுகளிப்பர்!
உற்றார் உறவினர், அவரது உறவுகள் என
ஒரு வீட்டிற்குள் காணக்கிடைக்காத போதும்
கண்டுகளிப்பர் ஒரு திரைக்குள்!
தனிமை எட்டிப்பார்க்கின்ற வேலையெல்லாம்
தத்துப்பிள்ளை கைசேர்ந்துகொள்ளும்!
பெற்றோரின் கவலை மறக்க – ஒலிக்கும்
காலங்களில் கேட்டு ரசித்த பாடல்கள்!
கலைந்து சென்ற ஞாபகங்கள்
புகைப்படங்கள் மீண்டும் காட்சிதரும்!
ஆலையதரிசனங்கள், ஆன்மிக தத்துவங்கள்,
என அனைத்தும் வலம்வந்துவிடும்!
தனிமையே தோற்றுவிடும் தத்துப்பிள்ளையின் துணையில்!
பெற்றபிள்ளைகள் உடனிருந்து செய்திடாதபோதும்
ஒரு சிறு நிறைவு – ஆம் பெற்றோரை
முதியோர் இல்லத்திற்கு தத்துக்கொடுக்காமல்
தத்துப்பிள்ளையைப் பெற்றுக்கொடுத்து
அவர்களது தனிமையைச் சிறிது அகற்றியதுக்காக!
பெற்றோரின் தத்துப்பிள்ளை – கைப்பேசி!
குறிப்பு: என் தாயின் உரையாடலில் நான் உணர்ந்ததின் வெளிப்பாடே இது.
நம் பிள்ளைகளும் அறிந்துகொண்டனரோ
நாமும் பிற்காலத்தில் தத்துப்பிள்ளைகளோடுதான் என்று
ஆதலால்தான் என்னவோ பிறந்த குழந்தையும்
விரும்பி துணை கொள்கிறது கைப்பேசியுடன் – பெற்றோரையும் விலகி!
Krishna Priya Mylswamy
பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Parents – பெற்றோரின் தத்துப்பிள்ளை
இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
0 Comments