திருமணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு | Tamil Thoughts

திருமணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு


திருமணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, ஒரு ஆணைப் பொறுத்தவரையில் தன்னால் அடக்கி ஆளப்பட ஒரு பொருள் கிடைக்கப்போகிறது என்பதாகவும், ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் தன்னை அடக்கி ஆள ஒரு தலைவன் கிடைக்கப்போகிறான் என்பதாகவும் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது.

பெண்ணின் பார்வையில் ஆண் என்பவன் சகல விதமான சுதந்திரங்களோடு உலவுபவன்; தன்னை விட பல விதங்களில் உயர்ந்தவனாக மதிக்கப்படுபவன்; தவறுகள் செய்ய சுலபமாக அனுமதிக்கப்படுபவன்; எனவே பெண்ணுக்கு ஆணிடம் இருப்பது பயம், அன்பு, மரியாதை என்பதை விட ஒருவிதமான பொறாமை என்று சொல்லலாம்.

இவை எல்லாவற்றையும் களைத்துவிட்டு உனக்கு நான், இனி எனக்கு எல்லாமுமாக நீ என உத்தரவாதம் கொடுக்கப்படும் ஒரு காகித நாள் !

ஒருவேளை திருமணம் என்பது அடக்குமுறை என நினைப்பவராக இருந்தால் இன்னொரு காகிதத்தில் கையெழுத்து இடும் காலம் வெகு தொலைவில் இல்லை என நினைக்கிறேன்.

என்ன சொல்கிறீர்கள் ?


0 Comments

Your email address will not be published. Required fields are marked *